Wednesday, October 7, 2015

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்


நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :
--------------------------------------------------------------------

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
மரமும் கடவுள்,
கல்லும் கடவுள்,
நீரும் கடவுள்(கங்கை),
காற்றும் கடவுள் (வாயு),
குரங்கும் கடவுள் அனுமன்,
நாயும் கடவுள் (பைரவர்),
பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,
பெண் ஆசையை ஒழிக்க
இராமாயணம்,
மண் ஆசையை ஒழிக்க
மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
பகவதம்,
அரசியலுக்கு
அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு
காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு
சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு
வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு
யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு
வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு
கோள்கணிதம்.
11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.
14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்

No comments:

Post a Comment